தமிழ

சிறுவர் முகாம்கள்

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்புகள், குழந்தைகள் (வயது 8-12) மற்றும் இளைய வயதினர்களுக்கு (வயது 13-18) ஒரு நாள் பயிற்சி முகாமில், ஆனாபான தியானம் (விபஸ்ஸனா தியானத்தின் முதல்நிலை) கற்கும் வாய்ப்பினை வழங்குகிறது. இந்த பயிற்சியில், உடற் சார்ந்த மற்றும் மனத்திறனை வளர்க்கும் செயற்பாடுகளும் உண்டு. ஆனாபான தியானம் மனக்கூர்மையினை வளரச் செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மிகுந்த நன்மைகள் உண்டாகின்றன.

பலர் தங்களின் எண்ணத்தில், மனோபாவத்தில், நடத்தையில் நேர்நிலையான மாற்றத்தை பெறுகின்றனர். அவர்கள் உள்சக்தியை வளர்த்துக்கொள்கின்றனர். இது தவறான செயல்களை விடுத்து சரியான மற்றும் தகுந்த செயல்களை அவர்கள் தேர்ந்தெடுக்க உதவுகிறது”. பலர் அவர்களது ஞாபகத் திறன் உறுதியடைவதை காண்கிறார்கள். மேலும், தங்களது கவலைகளிலிருந்து மீண்டு மன அமைதியை பெறுகிறார்கள்.

பயிற்சி முகாம் விண்ணப்பம்

இணையம் மூலம் விண்ணப்பிக்க, தயவு செய்து வகுப்பு கால அட்டவணைக்கு சென்று.